இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ் அப் கால் மூலம் நூதன முறையில் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டுமென தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். +84, +62, +63, +212, +917 ஆகிய எண்களில் தொடங்கும் மலேசியா, எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து whatsapp கால் மூலம் மோசடி நடைபெறுவதால் இதுபோன்ற அழைப்புகளை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.