வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது.

இந்நிலையில் வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடலில் வருகின்ற ஏழாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடக்கில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் எனவும் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயலின் தன்மை மற்றும் நகர்வு திசை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.