தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 நாட்களில் 20 கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிமுக பிரமுகர்கள் இரண்டு பேர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்ற கொலை சம்பவங்கள் சொத்து தகராறு, நகை, பணம் மற்றும் மது போதை தகராறு உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ளது.

தமிழகத்தின் ஸ்மார்ட் சிட்டி என்று அழைக்கப்படும் சென்னை கொலை நகரமாக மாறி வருவது மக்களுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களை கலைய காவல் துறையும் அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகள் எழுந்துள்ளது.