சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னை கிண்டியில் கட்டுப்படும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு டெல்லி சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி 110 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இந்த செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாட்டில் புதிதாக தற்போது தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளின் வளாகத்தில் தொடங்கப்படும். இந்த கல்லூரிகளில் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் ஒவ்வொரு வருடமும் ஒரு கல்லூரியில் 100% பேர் என 1100 பேர் செவிலியர் படிப்பை படிப்பார்கள் என்று கூறியுள்ளார்.