வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் ஒடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.