நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வங்கியால் கொடுக்க முடிந்த குறைந்தபட்ச வட்டியை (MCLR) எஸ்பிஐ வங்கி 5bps உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வட்டி இந்த மாதம் முதல் உயரக்கூடும். அதனைப் போலவே இனிமேல் புதிதாக கடன் வாங்குவதற்கு வட்டி விகிதம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த புதிய வட்டி விகிதம் நடைமுறைக்கு வருவதாக sbi வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி மூன்று வருடங்களுக்கான MCLR 8.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு sbi வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.