மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர மக்கள் பயன்பெறும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வருமான வரி சட்டத்தின் கீழ் 7.27 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த போது ஏழு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் யாரும் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் ஒரு குழு அமைத்து பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனைவருக்கும் பயன்படும் வகையில் வருமான வரி விலக்குக்கான லிமிட்டை உயர்த்தி உள்ளது.அதன்படி இனி மேல் 7 லட்சத்து 27 ஆயிரம் ஆண்டு வருமானம் வாங்குபவர்கள் வருமான வரி எதுவும் செலுத்த வேண்டாம். அதற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டினால் புதிய வருமான வரி சட்டத்தின்படி வரி செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.