மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரயில் நிலையம் பக்கத்தில் லெவல் கிராசிங் கேட் உள்ளது. இந்த கேட் ரயில் வந்ததால் மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கேட் மூடும் போது அதில் மாட்டிக்கொண்டது. அப்போது தண்டவாளத்தில் வந்த ரயில் காரின் பின்புறத்தில் பாய்ந்தது.

ரயிலின் வேகம் குறைவாக இருந்ததால் காரின் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து காரின் மீது பாய்ந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த தகவலை அங்குள்ள மக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தகவலை அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில் காரின் ஓட்டுனர் வேகமாக வந்ததால் இந்த விபத்து உருவானது என்றும், ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.