விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 இரண்டாவது போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா , ஷுப்மான் கில் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். ரோகித் சர்மா 44 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்லுடன் இணைந்து 67 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார்.

கோலியால் பெரிய அதிசயங்களை செய்ய முடியவில்லை :

ஷுப்மான் கில் எந்த பெரிய அதிசயத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும். இதையடுத்து விராட் கோலியும் (3 ரன்கள்) விரைவில் பெவிலியன் திரும்பினார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெலலலகேவின் மாயாஜால சுழற்பந்து வீச்சு 5 இந்திய பேட்ஸ்மேன்களை ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் அனுப்பியது.

குல்தீப் யாதவின் சுழலில் சிக்கிய இலங்கை பேட்ஸ்மேன் :

இந்திய வீரர்கள் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தனர். இலக்கை துரத்த இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. கடைசியில் தனஞ்செய டி சில்வா(41) மற்றும் துனித் வெல்லலகே (42*) போராடினர். பின் சில்வா அவுட் ஆனதை தொடர்ந்து வந்த வீரர்கள் பெவிலியனுக்கு திரும்ப இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. துனித் வெல்லலகே அவுட் ஆகாமல் கிரீஸில் இருந்தார். இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டிக்கிடையே  விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலி மற்றும் ஜடேஜாவின் வைரல் வீடியோ :

குறிப்பாக கோலியின் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் விரும்பி வருகின்றனர். வீடியோவில், கோலியும் ஜடேஜாவும் இலங்கைக்கு எதிரான வெற்றியை நடனமாடி கொண்டாடுகிறார்கள். அதேபோல விராட் கோலி லுங்கி டான்ஸ் பாட்டுக்கு ஆடுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.