2023 ஆசியக் கோப்பை  இறுதிப் போட்டியில் இடம் பெற பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே இன்று மெகா ஆட்டம் நடைபெறவுள்ளது..

செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பாகிஸ்தான், இலங்கையைத் தொடர்ந்து இந்திய அணி சூப்பர் 4 இன் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு சம்பிரதாயமான போட்டியாக இருக்கும். எனவே, இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு இதுவே கடைசி போட்டியாகும். ஏனெனில் இலங்கை அணியை இந்திய அணி தோற்கடித்த பிறகு வங்கதேசத்தின் சவால் முடிவுக்கு வந்தது.

இப்போது 2 அணிகள் (இலங்கை – பாகிஸ்தான்) இறுதிச் சுற்றில் இடம் பிடிக்கப் போராடுகின்றன. இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். பாபர் அசாம் பாகிஸ்தானை வழிநடத்துவார். தசுன் ஷனக தலைமையில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இது செய் அல்லது மடி போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதனால் தோற்கும் அணியின் பயணம் இத்துடன் முடிவடையும்.

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

செப்டம்பர் 10 ஞாயிறு முதல் செவ்வாய் 12 வரை 3 நாட்களில் ஆர் பிரேமதாச மைதானத்தில் மழையும் போட்டியில்  கலந்து கொண்டது. இப்போது மழையால் பாகிஸ்தான் இலங்கை போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், நிகர ரன் ரேட்டின் பலத்தில் இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எனவே, இந்தப் போட்டியில் மழை வந்தால், பாகிஸ்தான் வீட்டுக்கு போக வேண்டியது தான்..

பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் 5 மாற்றங்கள் :

இலங்கைக்கு எதிரான  போட்டியில் பாகிஸ்தான் அணி 5 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான், சல்மான் அலி ஆகா, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் மற்றும் பகீம் அஷ்ரப் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள். நசீம் ஷா காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜமான் கான் அணியில் இணைந்துள்ளார்.

இந்த முக்கியமான போட்டிக்காக, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹரிஸ், வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் ஜூனியர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல், வேகப்பந்து வீச்சாளர் ஜமான் கான் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன் :

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஜமான் கான்.

இலங்கை அணியின் சாத்தியமான லெவன் :

தசுன் சானகா (கேப்டன்), குசல் மெண்டிஸ் , பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்ன, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதிர சமரவிக்ரம, மகேஷ் திக்ஷன, துனித் வெலலகே, மதிஷா பத்திரனா, ரஜிதா.