தமிழ் சினிமாவில் முன்னணியின் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய் உடன் ஜோடி சேர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில் 190 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட் 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டிக்கெட் 190 ரூபாய்க்கு கொடுக்கப்படும் நிலையில் 200 ரூபாய்க்கு கூப்பன் தரப்படுவதாகவும் அரசை ஏமாற்ற நூதன முறையில் இந்த வேலைகளில் ஈடுபடுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.