‘லியோ’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு என்பது நடிகர் விஜய்யின்  அரசியல்  வருகையின் காரணமாகத் தான் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு தர இயலாது என்பது அரசின் இயலாமையை காட்டுகிறது. இதுவரை எத்தனையோ படங்களுக்கு அவர் பாடல் வெளியீட்டு விழா நடத்தியிருக்கிறார்.

இந்த முறை மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? நீங்கள்  அரசியல்  மாநாடு நடத்தும் போது லட்சக்கணக்கானோர் கூடுகிறார்கள். உங்களுக்கு மட்டும் பாதுகாப்பு யார் கொடுக்கிறார்கள்? விஜய்க்கு மட்டும் நெருக்கடி கொடுக்கிறீர்கள். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்தார்.