தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகின்றன.

இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு பிரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். நேற்று தெலுங்கு போஸ்டரும் அடுத்து கன்னட போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படத்தில் வரும் hyena காட்சியை படமாக 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் அடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.