தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அவ்வப்போது ‘லியோ’ படம் பற்றி ஏதேனும் ஒரு அப்டேட் எப்படியாவது வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஸ்வதிஷ்டா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விக்ரம், சவரக்கத்தி படங்களில் நடித்த இவர், லியோவில் இணைந்ததாக ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் லோகேஷுக்கு நன்றி தெரிவித்ததுடன், தளபதி விஜய் உடன் நடிப்பது தனக்கு சிறப்பான தருணம் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். லியோவில் ஏற்கனவே த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.