தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

இந்நிலையில்  பொன்னியின் செல்வன் விழாவில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டனர். லியோ ஷூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன். லோகேஷும், உங்க தளபதியும் நல்லா இருக்காங்க. மற்றவற்றை லியோ நிகழ்ச்சியில் பேசலாம் என பதிலளித்தார்