
மதுரை மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த மற்ற பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.