ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியில் மீனவர்கள் இருந்தனர். இந்த லாரி சீதன பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி அந்த லாரியை முந்தி செல்ல முயற்சித்தது. அப்போது கண்டெய்னர் லாரி மற்றொரு லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.

இந்தக் கோர விபத்தில் 5 பேர்  உடல் நசுங்கி பரிதாபமாக இறந்த நிலையில் மற்றொருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அதன் பிறகு 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்