சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று, சாலைகளில் வாகனங்களை முந்திச் செல்ல முயலும் போது ஏற்படும் ஆபத்தை கண்முன்னே நிறுத்துகிறது. இந்த வீடியோவில், நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற ஒரு கார், முன்னால் செல்லும் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற ஒரு லாரியின் மீது அந்தக் கார் மிக பலமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், பார்ப்பவர்களின் நெஞ்சையே பதறச் செய்யும் வகையில் அந்த காட்சிகள் அமைந்துள்ளன.
जल्दबाजी जानलेवा हो सकती है
दूसरों को ओवरटेक करने की होड़ में अपनी और दूसरों की जान जोखिम में न डालें। pic.twitter.com/xm4lFaUcAP— TANVEER (@mdtanveer87) January 2, 2026
“>
சாலை விதிகளையும் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்தி, ஒரு சில வினாடிகள் முன்னால் செல்ல வேண்டும் என்ற அவசரம் எவ்வாறு ஒருவரின் உயிரையே பறிக்கும் நிலைக்குத் தள்ளும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாகும்.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், சாலையில் ஓட்டுநர்கள் பொறுமையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘அவசரம் எப்போதும் ஆபத்தானது’ என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.
