பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பாடம் நடத்த வேண்டிய பேராசிரியரே வரம்பு மீறி மாணவியிடம் காதல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறைக்குள் மாணவர்களுக்கிடையே பாடம் நடத்திக் கொண்டிருந்த அந்தப் பேராசிரியர், திடீரென ஒரு மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்கேயே பேராசிரியரைச் செருப்பால் அடித்து வெளுத்துள்ளார். “நீதான் எனக்கு ஐ லவ் யூ சொன்னாய்” என்று அந்தப் பேராசிரியர் வாதிட, “நான் அப்படிச் சொல்லவே இல்லை” என்று மாணவி ஆவேசமாக மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மாணவியின் பதிலடியைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் சேர்ந்து அந்தப் பேராசிரியரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆசிரியராக இருந்து கொண்டு மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட அந்தப் பேராசிரியரின் செயல் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.