
“நீயா நானா” நிகழ்ச்சி, சமூகத்தில் பல்வேறு தலைப்புகளை விவாதிக்கும் மேடையாக இருப்பதோடு, மனிதர்களின் தனித்துவமான திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்து நடைபெற்ற ஒரு விவாதத்தில், பொருளாதாரத் துறை ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். தமிழில் ‘ல’, ‘ள’ உச்சரிப்புகளை மாணவர்கள் சரியாகக் கையாளுவதில்லை என்று கூறிய அவர், “‘குண்டு ல’, ‘சிறப்பு ழ’, ‘சின்ன ள’ என்று மாணவர்கள் கூறுவது தவறு” என்று சுட்டிக்காட்டினார். இதற்கு ஒரு மாணவர், “லதாவுக்கு வரும் ‘ல’வா, மஞ்சுளாவுக்கு வரும் ‘ள’வா?” என்று கிண்டலாகக் கேட்டு, சுற்றியிருந்த மாணவர்களை சிரிக்க வைத்தார். ஆனால், இந்த ஆசிரியர் அசராமல், தனது புலமையையும், கற்பிக்கும் திறனையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram
அந்த ஆசிரியர், மாணவரின் கிண்டலை ஒரு கற்பித்தல் வாய்ப்பாக மாற்றினார். “‘மஞ்சு’ என்றால் மேகம், ‘மேகம் + உளா’ என்று பொருள்படும், அதுதான் ‘மஞ்சுளா’ என்ற பெயராக வந்தது,” என்று அந்தப் பெயருக்கு அர்த்தம் கொடுத்து, மாணவர்களை ஆச்சரியப்படுத்தினார். மேலும், உச்சரிப்பு பயிற்சிக்காக, “ஏழை குழந்தை வாழைப்பழத்திற்காக ஏங்கி ஏங்கி அழுதது” என்ற (tongue twister) மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகக் கூறினார். இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறை, மாணவர்களை ஈர்க்கும் வகையில் இருந்ததோடு, கற்பித்தல் என்பது வெறும் பாடமாக மட்டுமல்ல, வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. இதைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத், அவரது முயற்சியையும், பொறுமையையும் பாராட்டினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
View this post on Instagram