
மைதானத்திற்குள் நுழைந்த் பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கை வீரர் உதானா..
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் போல, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக நடைபெற்று வரும் இந்தப் போட்டித் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.இந்தப் போட்டித் தொடரில் கடந்த முறை யாழ் கிங்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. பாபர் அசாம் ஷாகிப் அல் ஹசன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கின்றனர். போட்டி ஜூலை 30ஆம் தேதி தொடங்கியது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும்.
தம்புல அவுரா அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பி லவ் கண்டி அணி 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நடப்பு சாம்பியனான ஜப்னா கிங்ஸ் 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. லீக்கில் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களுக்கான போட்டி கடுமையாக உள்ளது.
லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் பாம்புகள் மைதானத்திற்குள் புகுந்து அடிக்கடி பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. கடந்த முறை தம்புல்லா அவுரா மற்றும் காலே டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் விஷப்பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்ததால் போட்டி தடைபட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியின் போதும், மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது நொடியில் பாம்பிலிருந்து இலங்கை அணி வீரர் இஸ்ரு உதானா உயிர் தப்பினார். லவ் கண்டி அணியின் உதானா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, பின்னால் நோக்கி வந்துககொண்டிருந்தார். அப்போது திடீரென அருகில் சென்றதும் சுதாரித்து கொண்டு விலகினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது இந்த பரபரப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று பி லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பி லவ் கண்டி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நடப்பு சாம்பியனான ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவரில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Snake spotted again near Isuru Udana at LPL. pic.twitter.com/N3SnOgwoTm
— Himanshu Pareek (@Sports_Himanshu) August 13, 2023
Isuru Udana's Lucky escape 🐍#LPL2023 #LPLT20 pic.twitter.com/olOqL21UUr
— Home of T20 (@HomeofT20) August 13, 2023