எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ரேஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதுமாக வருவாய்த்துறை, நிதிசேவை துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை பாதுகாப்பு அமைச்சகம் என பலதரப்பட்ட துறைகளில் நடத்தப்பட்ட 70 ஆயிரம் பேருக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி பிரதமர் மோடி கான்ஃபரன்ஸ் கால் மூலமாக பணி நியாமா  கடிதங்களை வழங்கினார். தற்போது அரசு துறையில் மற்றும் நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 70000 மேற்பட்ட இளைஞர்களுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி கடிதங்களை விநியோகம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.