மும்பையில் உள்ள கண்ணம்வார் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான பிரீத்தி. இவர் நேற்று தீபாவளியன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவர்கள் மற்றும் 30 வயது உடைய நபர் ஒருவர் இனைந்து பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த ப்ரீத்தி சாலையில் பட்டாசு வெடிப்பதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறாக இருக்கும் என்று அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளார்.

 

அதன் பிறகு அதே வழியாக ப்ரீத்தி வரும்போது சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இருந்த 30 வயதுடைய பிரதீப் என்பவர் பட்டாசு ஒன்றை ப்ரீத்தி மீது வீசி உள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரீத்தி இது பற்றி கேட்கும் போது தவறுதலாக நடந்து விட்டதாக கூறிய பிரதீப் நகைத்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரதிப் பிரீத்தியை தகாத முறையில் பேசி உள்ளார்.

இதனால் பிரதிப்பை காவல் நிலையத்திற்கு வருமாறு பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த ஒருவரது உதவியுடன் ஆட்டோவில் அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் காவல் நிலையம் அருகே வரும்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரதீப் ப்ரீத்தியின் தலையை இரும்பு கம்பியில் மோதிவிட்டு தப்பி சென்றார். இது தொடர்பாக பிரீத்தி அளித்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.