இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் போரை நிறுத்த வேண்டும் என்றும் பல நாடுகள் அறிவுரைத்திய நிலையில் இரண்டு தரப்பினரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக உள்ள பெண்கள் குழந்தைகள் என 70 பேரை விடுதலை செய்ய தயார் என்றும் அதற்கு பதிலாக இஸ்ரேல் ஐந்து நாள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த 5 நாள் போர் நிறுத்தத்தின் போது காசாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் போன்றவை வந்து சேர வேண்டும் என்றும் கூறியுள்ளது.