உ.பி மாநிலம் மீரட்டின் கன்கர்கேரா பகுதியில் நேற்று ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வெறிபிடித்த ஒரு காளை மாடு, அவ்வழியாகச் சென்ற வாகனங்களை முட்டித் தள்ளியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
சாலையில் ரகளை செய்த அந்த மாடு, திடீரென அங்குள்ள ‘சிட்டி கேர்ள்’ உணவகத்தை நோக்கிப் பாய்ந்தது. உணவகத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த அதன் உரிமையாளர் தீரஜ் ரதியை அந்த மாடு கொம்பால் முட்டி காற்றில் பந்தாடியது.
यूपी | मेरठ में सांड जी ने इस इंसान को सिक्स रन की माफिक उठाकर फेंकने का प्रयास किया, लेकिन सफल नहीं हो पाए !! pic.twitter.com/0A4sxhYbuJ
— Sachin Gupta (@SachinGuptaUP) January 15, 2026
நிலை தடுமாறி காற்றில் பறந்து விழுந்த தீரஜ், சுதாரித்துக்கொண்டு அங்கிருந்த ஒரு காருக்கு பின்னால் ஒளிந்துகொண்டார். இல்லையென்றால் அந்த மாடு அவரை மிதித்திருக்கும். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் தீரஜின் விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். மீரட் நகரில் சுற்றித் திரியும் ஆக்ரோஷமான காளைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
