நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் புதிய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் உடல் எடை குறைந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், ரோபோ சங்கர் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இன்று புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் உடல் எடை மிகவும் குறைந்து, மெலிந்த நிலையில் இருக்கிறார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து வெளியான தகவலில் படத்திற்காக ரோபோ சங்கர் உடல் நிலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஒரு வருடமாகவே உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இதுதான் எடை இழப்புக்கு காரணம் வேறு எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.