மலைப்பகுதியில் ரீல் வீடியோ எடுக்கும்போது ஒரு பெண் குதிரையால் தள்ளப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், அந்த பெண் சஞ்ஜு ரத்தோடின் “ஷேக்கி ஷேக்கி” என்ற பாடலுக்கு நடனமாடி, அழகான மலை பின்னணியில் ரீல் தயாரிக்கிறார். அருகில் அமைதியாக மேய்ந்துகொண்டிருந்த குதிரை திடீரென அதை கவனித்து, சீறி திரும்பி பின்புற காலால் வலுவாகத் தள்ளுகிறது. இதனால் பெண் காற்றில் பறந்து தரையில் விழுகிறார்.

இந்த விஷயம் X தளத்தில் @robby_5m என்ற கணக்கில் யஷ்ராஜ் சௌஹான் என்பவரால் பகிரப்பட்டு, சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், வேடிக்கையுடன் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் “கவனக்குறைவின் விளைவு பார்த்தீர்களா” என்றும், “குதிரையை அழைக்க வேண்டாம்” என்றும், “ரீல் தயார் ஆயிடுச்சு” என்றும் கிண்டல் செய்கின்றனர்.