
மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த பிரகாஷ் ஊருக்குள் வருவதற்கு மிகவும் அவமானமாக இருப்பதாக கூறினார். இதனால் வேதனை அடைந்த அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிறுமிக்கு மயக்கம் மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜா தன்னை பற்றி ஊர் முழுவதும் அவதூறு பேசினார். என்னை ஊருக்குள் செல்ல முடியாத அளவுக்கு செய்து விட்டனர். என்னுடைய மரணத்திற்கு ராஜா மட்டும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.