
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன். இவர் தற்போது முதல்வராவதற்கு எடப்பாடி பழனிச்சாமியை விட செல்லூர் ராஜு தான் தகுதியானவர் என்று கூறியுள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வராவர் என்று செல்லூர் ராஜு கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் செல்லூர் ராஜு நன்றாக காமெடி அடிப்பார். ஆற்றில் தெர்மாகோல் விட்ட செல்லூர் ராஜு மிகப்பெரிய அறிவாளி. மேலும் எடப்பாடி பழனிச்சாமியை விட செல்லூர் ராஜூவுக்கு தான் முதல்வராக அதிக தகுதி உள்ளது என்று கிண்டலாக கூறினார்.