கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் ஐந்தாயிரம் வாகனங்களில் 50 வாகனங்களில் மட்டுமே இந்த ஜிபிஎஸ் கருவி உள்ளது. இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று ஆறு உத்தரவுகளை அரசு பிறப்பித்தது. ஆனால் தற்போது வரை இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

சில ரேஷன் வாகனங்களை தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள். இதனை தடுப்பதற்கு அரசின் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த திட்டத்தின் தொடக்கத்தில் டிராக்கிங் அடிப்படையில் வாகனங்களை ஆய்வு செய்வது கடினமாக இருந்ததால் இதை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.