
ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருப்பின், வரும் ஜூன் 30-ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனென்றால் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இலவச ரேஷன் வசதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதாவது, ரேஷன் கார்டை மக்கள் தங்களின் ஆதாருடன் இணைக்க அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதற்குரிய காலக்கெடு ஜூன் 30, 2023 தேதி ஆகும். இந்த இரண்டையும் ஒன்றாக இணைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்கு நீங்கள் இலவச ரேஷன் பெரும் பலனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்குரிய கடைசி தேதி ஜூன் 30 ஆகும். உணவு மற்றும் பொது விநியோகத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆகவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இலவச ரேஷன் பெற்று வருவோர் தங்களின் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும்.