தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹3,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பரிசுத் தொகுப்பு குளறுபடி இல்லாமல் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக, தற்காலிகமாக “ஒரே நாடு ஒரே ரேஷன்” (Inter-operability) வசதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதாவது, உங்கள் கார்டு எந்தக் கடையில் இணைக்கப்பட்டுள்ளதோ, அங்கேயே மட்டும் தான் பொருட்கள் வாங்க முடிந்தது.

​தற்போது பொங்கல் பரிசு விநியோகம் சுமார் 97% நிறைவடைந்துவிட்டது. சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் பழையபடி தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி (Inter-operability) இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.