நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசின் பல நலத்திட்ட உதவிகளும் கிடைக்கின்றன. அரசின் அனைத்து பணிகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் வகையில் அனைத்து ஆவணங்களையும் ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது அமலில் உள்ளது.

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் கார்டும் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பல உறுப்பினர்கள் பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் அல்லாமல் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து வழங்கப்படும் பொருட்களின் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டில் உள்ள குழந்தைகளின் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் பெற்றோர்களின் கவனத்திற்கு வராமலேயே குழந்தைகளின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்து விடப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரேஷன் கார்டுக்கு வரவேண்டிய பொருள்களின் அளவும் குறைந்த விடும் என்பதால் ரேஷன் அட்டையில் உள்ள குழந்தைகளின் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் உடனே பொதுமக்கள் இணைக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.