
இந்தியாவைப் பொறுத்த வரையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கும் இது பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதனை பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாகும். தற்போது தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் உறுப்பினராக உள்ள ஒருவர் உயிரிழந்த பிறகு அடக்கம் செய்யும்போது அவரின் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது.
ஆனால் குடும்ப உறுப்பினர்கள் தவறுதலாக அவர்களுடைய ஆதார் கார்டின் நகலை வழங்கி விடுகின்றனர். அதன் பிறகு ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் அட்டைதாரர்கள் உயிரிழந்தவரின் பெயரை நீக்குவதில் கவனமாக செயல்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.