நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கின்றது. இந்நிலையில் ரேஷன் இலவச பொருட்கள் பெரும் ரேஷன் அட்டைதாரர்கள் அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதேசமயம் அரசு புதிய விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி ஒருவருக்கு நூறு சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது.

குடும்பத்தில் எந்த ஒரு உறுப்பினரும் அரசாங்க வேலையில் இருக்கக் கூடாது. பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் இருந்தால் குடும்ப வருமானம் கிராமத்தில் 2 லட்சத்திற்கும் நகரத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலிருந்தால் அவர்கள் ரேஷன் கார்டு திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டி எஸ் ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.