நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஏராளமான குளறுபடிகள் நடந்து வருகிறது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் ரேஷன் கார்டோடு ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் அடுத்த வருடத்தில் இருந்து ரேஷன் கார்டு தொடர்பான எந்த ஒரு சலுகையும் பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரீப் கல்யாணி யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து வருடத்திற்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக இந்த வேலையை முடிக்கவும்.