நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் அனைத்தும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதன்படி அரியானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டையுடன் கூடிய ஒரு லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே இரண்டு பாட்டில் கடுகு எண்ணெய் வழங்கப்பட வேண்டும். ஆனால் மீதமுள்ள பயனாளிகளுக்கு கிடைக்காது. அதற்கு பதிலாக வேறு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் மக்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் கடுகு எண்ணெய் வழங்கப்படும் என மாவட்ட உணவு வழங்கல் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டுமே கடுகு எண்ணெய் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் குடும்ப அடையாள அட்டையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இனி மின் கட்டணத்திலும் தள்ளுபடி வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.