நாடு முழுவதும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14-ஆவது தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 15 வது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த தவணை பணம் பெற விரும்பும் அனைத்து விவசாயிகளும் கேஒய்சி சரிபாரத்தை முடிப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை செய்யவில்லை என்றால் அடுத்த தவணைக்கான பணம் உங்களுக்கு கிடைக்காது. எனவே விவசாயிகள் பிஎம் கிஷான் மொபைல் செயலியில் உள்ள முக அங்கீகார அம்சம் மூலம் தொலைதூரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தற்போது வீட்டில் அமர்ந்து கொண்டே ஓடிபி அல்லது கைரேகை இல்லாமல் தங்கள் முக அங்கீகாரத்தை பெறலாம். அவர்கள் எவ்வித அழைச்சனும் இல்லாமல் வீட்டில் இருந்தபடி ஸ்கேன் மூலம் கேவைசி சரிபார்ப்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் 14வது தவணை பணம் இன்னும் வரவில்லை என்றால் 155261 என்ற ஹெல்ப்லைன் நம்பர் அல்லது 1800115526, 011-23381092 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அது தவிர [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் உங்கள் பிரச்சனையை தெரிவிக்கலாம்.

மேலும் பதினைந்தாவது தவணைக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்யலாம். இது தவிர அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற வெப்சைட்டை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.