ஏடிஎம் கார்டு என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் இந்த ஏடிஎம் கார்டு மூலமாக அடிக்கடி மோசடிகளும் நடந்து வருகிறது . எனவே ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அந்த பணத்தை எளிதாக ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்கும் போதெல்லாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ATM  இல் பணம் எடுக்கும் போது ஏடிஎம் பின் நம்பரை உள்ளிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

பின் நம்பரை உள்ளிடும் பொழுது பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். வேறு யாராவது இருந்தால் அவர்கள் கடவுச்சொல்லை பார்த்துள்ளார்களா என்பதை சரி பார்க்க வேண்டும். ஏடிஎம் கார்டை வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாது. அதேபோல ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்கச் சொல்லி வேறு யாருடைய உதவும் கேட்கக்கூடாது. அப்படி உதவி கேட்டால் மோசடிக்கு ஆளாகலாம். ஏடிஎம் கார்டு கடவுச்சொல்லை நினைவு வைத்திருக்க வேண்டும். எதிலும் எழுதி வைக்க கூடாது . ஒருவேளை ஏடிஎம் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ பெரும் இழப்பை சந்திக்க நேர்ந்திடும். டெபிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேறு ஏதும் சாதனம் இருக்கிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.