புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட நேரடி ஆட்சேர்ப்பு பணியை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட உள்ளது. நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பல்வேறு நிர்வாக பிரிவுகளில் சுமார் 5,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஏழு வருடங்களாக நிதி நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த வருடம் 1050 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 600 பணியிடங்களை அரசு நிரப்பியது. இதனை தொடர்ந்து மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.