ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இதனால் பல முக்கிய ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைத்தால் மட்டுமே பொது மக்களுக்கு ரேஷன் வழங்கப்படும் எனவும் இதற்கு முன்னதாக ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என எதில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். ஆஃப்லைனில் இணைப்பதற்கு அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்கும் ஆன்லைன் மூலமாக ஆதரையும் இணைக்கலாம்.