
தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ரேஷன் கடைகள் இயங்காததால் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு நிலைமை சீரான பகுதிகளில் உடனே ரேஷன் கடைகள் திறந்து மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் விரைவில் புதிய ரேஷன் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.