தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்து 793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரேஷன் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும்.

அந்த வகையில் இன்று உணவு சப்ளை மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் என அனைத்து கோரிக்கைகளும் மனுக்களாக பெறப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.