வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மழை மற்றும் காற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

புயலின் தீவிரத்தை உணர்ந்து, ‘ரெட் அலர்ட்’ மற்றும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.