இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. ஆனால் அரசு நிறுவனமான bsnl ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. 91 ரூபாய் திட்டத்தில் அதிக நாட்கள் வேலிடிட்டி நன்மையை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் 91 ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றது. குறைந்த கட்டணத்தில் அதிக வேலிடிட்டி தரும் இந்த ஒரு திட்டம் மட்டுமே. ஆனால் இது வேலிடிட்டி தவிர எந்த ஒரு சலுகையும் கிடையாது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு வாய்ஸ் கால்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.