மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் வருடம் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு   8000 கோடி ரூபாய்க்கு மேலாக இலவச மருத்துவ காப்பீடு மூலம் மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ‘ஆயுஷ்மான் அட்டை’ வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறலாம்.

குடிசை வீட்டில் வசிப்போர், தினக்கூலிகள், நிலம் இல்லாத மக்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். PM JAY என்ற மொபைல் செயலி மூலம் வீட்டில் இருந்தே இந்த அட்டைக்கு விண்ணபிக்க முடியும்