
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ராஜுவ். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 2 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ராஜுவும் அந்த பணத்தை கொடுத்து இருக்கிறார்.
ஆனால் சொன்னபடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் அந்த நபர். இதனால் நாப்பதாயிரம் கடன் கொடுத்த நண்பர் பணத்தை ராஜுவிடம் திருப்பி கேட்டதால் தன்னுடைய மனைவி விஜி, மகளுடன் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் ராஜு மற்றும் அவருடைய மனைவி உயிர் தப்பிய நிலையில் 6 வயது மகள் உயிரிழந்துள்ளார்.