கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற திரைப்படங்களை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதன் பிறகு பிரசாத் நீல்  இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், கேஜிஎஃப் 2 படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதேபோன்று ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா திரைப்படமும் தென்னிந்திய சினிமாவில் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து அமோக வரவேற்பை பெற்றது.

இந்த 2 படங்களையும் தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர்  விஜய் கிரகந்தூர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி  அடுத்த 5 வருடங்களில் 3000 கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு ஹிட் படத்தையாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. அடுத்த 2 வருடங்களுக்குள் 10 முதல் 12 படங்களை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால் தென்னிந்திய சினிமாவில் இன்னும் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த நிறுவனமானது தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் ரகு தாத்தா, கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் எழுத்தில் பகீரா, பாகுபலி புகழ் பிரபாஸின் சலார், பகத் பாசலின் தூமம் போன்ற திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.