
திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்…? எதுவுமே செய்யவில்லை என்று வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது அதிமுகவினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா .
அந்தவகையில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், “திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். திமுக இதே வழியில் ஆட்சி செய்தால் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் கடனை விட்டுச் செல்வார்கள். எல்லா வகையிலும் வரிகளை அதிகரிக்க செய்வதுதான் திமுக அரசின் சாதனை” என விமர்சித்துள்ளார்.