ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர்.. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், கணக்கில் செலுத்தி வரவு வைக்கலாம் எனவும் அறிவித்தது. இந்த நிலையில் 2000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த அடையாள அட்டை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்ற விதிமுறையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.